TNPSC Thervupettagam

உலக நிலங்கள் கண்ணோட்ட அறிக்கை

May 14 , 2023 561 days 346 0
  • இரண்டாவது உலக நிலங்கள் கண்ணோட்ட அறிக்கையானது பாலைவனமாக்கலைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை அமைப்பினால் (UNCCD) வெளியிடப் பட்டுள்ளது.
  • ஒன்பது கிரக எல்லைகள் தான் சுற்றுச்சூழல் எல்லைகளின் வரம்புகளாகும் என்ற நிலையில் அவை மனிதகுலத்திற்கானப் பாதுகாப்பான நடவடிக்கை மேற்கொள்ளும் பகுதியினை வரையறுக்கின்றன.
  • இவற்றுள் பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு, நிலப் பயன்பாட்டில் மாற்றம் மற்றும் புவி வேதியியல் சுழற்சிகள் ஆகியவற்றின் வரம்புகள் ஏற்கனவே மீறப் பட்டுள்ளன.
  • இந்த வரம்பு மீறல்கள் மனித நடவடிக்கைகளால் தூண்டப்பட்டப் பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன.
  • பூமியின் நிலப்பரப்பினுடைய இயற்கையான நிலையில் இருந்து, 70 சதவீதத்திற்கும் அதிகமான நிலப்பரப்பினை மனிதர்கள் ஏற்கனவே மாற்றியமைத்துள்ளனர்.
  • இது புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான பங்களிப்பினை அளித்துள்ளது.
  • இது வறுமை, பசி, சமத்துவமின்மை, விலங்கு வழியே பரவும் நோய்கள் போன்றவற்றின் அதிகரிப்புக்கு வழி வகுத்தது.
  • பயன்மிக்க விளைவுகளை அடைவதற்காக என்று நில மறுசீரமைப்புப் பணிகளுக்கான உலகளாவிய வருடாந்திரச் செலவினமானது 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 300 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் 7 டாலர் முதல் 30 டாலர் வரையிலான பொருளாதாரப் பலனாக திரும்பக் கிடைக்கப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • உலகளவில், 80% காடழிப்புக்கும், 70% நன்னீர்ப் பயன்பாட்டிற்கும் உணவு முறைகள் தான் காரணமாக உள்ளன.
  • நிலம் சார்ந்த பல்லுயிர்ப் பெருக்கத்தின் இழப்பிற்கு இது மிகப்பெரிய காரணமாகும்.
  • வெள்ளம், வறட்சி மற்றும் காட்டுத்தீ ஆகியவை நிலச் சீரழிவிற்கான சில பொதுவான சுற்றுச்சூழல் சார்ந்த சவால்கள் ஆகும்.
  • நிலம் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பானது புவி வெப்பமடைதல் செயல் முறையினைக் காலம் தாழ்த்த உதவுவதோடு வறட்சி, வெள்ளம் போன்ற பேரழிவுகளின் அளவையும், அவை மீண்டும் மீண்டும் உருவாகக் கூடிய வாய்ப்பினையும் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்