TNPSC Thervupettagam

உலக நிலமதிப்புச் சந்தையின் வெளிப்படைத் தன்மைக்கான குறியீடு

July 2 , 2018 2212 days 611 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட உலக நிலமதிப்புச் சந்தையின் வெளிப்படைத்தன்மைக்கான குறியீட்டில் 100 நாடுகளைக் கொண்ட தரவரிசைப் பட்டியலில் இந்தியா 35-வது இடத்தில் உள்ளது. (GRETI – Global Real Estate Transparency Index)
  • சந்தை அடிப்படைகள், கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் அந்நிய நேரடி முதலீட்டில் தாராளமயமாக்கல் ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக இந்தியா இந்தக் குறியீட்டில் ஒரு படி முன்னேறியுள்ளது.
  • இந்தக் குறியீட்டை ஜெஎல்எல் நிலமதிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு இரு முறை கணக்கிடப்படும் இந்த ஆய்வில் 2016-ல் இந்தியா 36வது இடத்தில் இருந்தது. 2014-ல் இந்தியாவின் தரவரிசை 40 ஆக இருந்தது.
  • ரியல் எஸ்டேட் சந்தையில் இந்தியா தற்போது அரை வெளிப்படைத்தன்மை மண்டலத்தில் உள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியம் (1-வது), ஆஸ்திரேலியா (2-வது), அமெரிக்கா (3-வது) பிரான்ஸ் (4-வது) மற்றும் கனடா (5-வது) ஆகிய நாடுகள் முதல் 5 இடத்தில் உள்ளன.
  • வெனிசுலா (100-வது), லிபியா (99-வது), செனேகல் (98-வது), மொசாம்பிக் (97-வது) மற்றும் ஐவரி கோஸ்ட் (96-வது) ஆகியவை மோசமான செயலாக்கம் கொண்ட நாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்