ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஜூன் 18 ஆம் தேதி உலக நீடித்த உணவியற் சமையற்கலை தினம் (World Sustainable Gastronomy Day) கொண்டாடப்படுகின்றது.
Gastronomy என்பது உணவு மற்றும் கலாச்சாரத்திற்கு இடையேயான உறவைப் பற்றிய கல்வியாகும்.
இத்தினமானது உணவியற் சமையற்கலையை (Gastronomy) உலகின் இயற்கை மற்றும் கலாச்சார பன்முகத்துவத்தோடு தொடர்புடைய கலாச்சார வெளிப்பாடு (Cultural expression) என அங்கீகரிக்கின்றது.
2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் ஐநா பொது அவையால் உலக நீடித்த உணவியற் சமையற்கலை தினம் பிரகடனப் படுத்தப்பட்டது.