ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையானது நவம்பர் 26 ஆம் தேதியினை உலக நீடித்த மற்றும் நிலையானப் போக்குவரத்து தினமாக அறிவித்துள்ளது.
நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தப் போக்குவரத்தினை மேம்படுத்துவதில் இது ஒரு குறிப்பிடத்தக்கப் படிநிலையினை எடுத்துள்ளது.
இந்த உலகளாவிய முன்னெடுப்பானது, விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், பொது மக்களுக்குக் கல்வி அளிப்பதையும், போக்குவரத்து நிலைத்தன்மை தொடர்பான மோசமான சிக்கல்களைத் தீர்ப்பதில் சர்வதேச அளவில் பல நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.