உலக நீடித்த வளர்ச்சிக்கான மாநாட்டின் (World Sustainable Development Summit) முதல் பதிப்பு இவ்வாண்டு புதுதில்லியில் நடத்தப்பட உள்ளது.
உலக நீடித்த வளர்ச்சி மாநாடானது ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தினால் (The Energy and Resources Institute-TERI) நடத்தப்படும் முக்கிய மன்றமாகும்.
2018-ஆம் ஆண்டிற்கான உலக நீடித்த வளர்ச்சி மாநாட்டின் கருத்துரு “நெகிழ்திறனுடைய கிரகத்திற்காக கூட்டிணைதல் “ (Partnership for Resilient Planet).
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்துவதற்காக இந்த மாநாட்டில் “Greenovation“ எனும் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
நீடித்த வளர்ச்சி, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் சேவையாற்றி வரும் உலகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஒரு பொதுவான மேடையில் ஒருங்கிணைப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகின்றது.
இந்தியா மற்றும் உலகின் தெற்கத்திய நாடுகளின் நீடித்த வளர்ச்சிக்காக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட முன்னணி சிந்தனைச் சாவடியே (think tank) ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனமாகும்.
மாசு உண்டாக்காத பசுமை ஆற்றல் (Clean Energy), நீர் மேலாண்மை, மாசுபாடு மேலாண்மை, நீடித்த வேளாண்மை மற்றும் காலநிலை நெகிழ்வுத் திறன் (climate resilience) ஆகியவற்றை மேம்படுத்துவதே ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கங்களாகும்.