புதுதில்லியில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரால் உலக நீடித்த வளர்ச்சி மாநாடு துவக்கி வைக்கப்பட்டது.
இது ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் எனப்படும் தெரி (The Energy and Resources Institute – TERI) நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது அந்நிறுவனத்தின் முக்கியமான ஒரு வருடாந்திர நிகழ்வு ஆகும். மேலும் இது வளரும் நாடுகளில் உள்ள உலகளாவிய விவகாரங்கள் மீது நடத்தப்படும் உலகின் ஒரே மாநாடு ஆகும்.
2019 மாநாட்டிற்கான கருத்துரு, “2030 ஆம் ஆண்டிற்கான இலக்கை அடைதல்: நமது வாக்குறுதியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.