TNPSC Thervupettagam

உலக நீர்தினம் – 22 மார்ச்

March 23 , 2018 2412 days 668 0
  • உலக நீர் தினம் நீர்பாதுகாப்பு மற்றும் பகிர்ந்து நுகர்தல் என்ற செய்தியைப் பரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று கடைபிடிக்கப்படுகின்றது.
  • இந்த ஆண்டிற்கானக் கருத்துரு : “நீருக்காக இயற்கை”. இது 21ஆம் நூற்றாண்டின் நீருக்கான சவாலை வெல்வதற்கு இயற்கை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்கிறது.
  • இது வளரும் நாடுகளில் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வசதிகளின் (clean water, sanitation and hygiene - WASH) உலகளாவிய அணுகலின்  முக்கியத்துவத்தில் கவனம் செலுத்துகிறது.
  • முதல் உலக நீர்தினம் 22 மார்ச் 1993 அன்று கடைப்பிடிக்கப்பட்டது.
  • 1992ஆம் ஆண்டு ரியோடி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச மாநாட்டின் (United Nations Conference on Environment and Development - UNCED) நிகழ்ச்சி நிரல் 21ல் (Agenda 21) முதன் முறையாக உலக நீர்தினம் முன்மொழியப்பட்டது.
  • பின்னர், ஐ.நா. பொது அவை சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான ஐ.நா. மாநாட்டின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டதுடன் டிசம்பர் 1992ல் ஒரு தீர்மானத்தை ஏற்றதன் மூலம் இத்தினத்தை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்