உலக நீர்யானை தினம் - பிப்ரவரி 15
February 22 , 2024
277 days
205
- இந்தத் தினமானது நீர் யானைகளின் வளங்காப்பு, பாதுகாப்பு மற்றும் மதிப்பினை உயர்த்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
- இத்தினம் ஆனது ஜிம்பாப்வே நாட்டில் துர்க்வே நீர்யானை அறக்கட்டளை திறக்கப் பட்ட ஆண்டு விழாவுடன் ஒன்றி வரும் விதமாக அதிகாரப் பூர்வமாக நிறுவப் பட்டது.
- நீர் யானைகள் பகுதியளவு நீர்வாழ் பாலூட்டிகள், ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியை பூர்வீகமாகக் கொண்டவை என்பதோடு அவை 2,000 கிலோ வரையில் எடை உள்ளவை ஆகும்.
- யானைகள் மற்றும் காண்டாமிருகங்களுக்கு அடுத்தபடியாக இது மூன்றாவது பெரிய நிலவாழ்ப் பாலூட்டியாகும்.
- இன்று, நீர் யானைகளின் எண்ணிக்கை 115,000 முதல் 130,000 வரை இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
Post Views:
205