TNPSC Thervupettagam

உலக நீர் கண்காணிப்புத் தினம் - செப்டம்பர் 20

September 25 , 2024 63 days 72 0
  • 2003 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் தூய்மையான நீர் அறக்கட்டளை (ACWF) அமைப்பானது இந்த நாளைத் தொடங்கியது.
  • தொடக்கத்தில், 1972 ஆம் ஆண்டு அமெரிக்க தூய்மையான நீர் சட்டத்தின் நினைவாக அக்டோபர் 18 ஆம் தேதி இதற்காக தேர்வு செய்யப்பட்டது.
  • ஆனால் இதில் பங்கேற்பாளர்கள் மற்றும் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக வேண்டி, இந்தத் தினத்திற்கான அதிகாரப்பூர்வ தேதியானது 2007 ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 என மாற்றப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘Water for Peace’ என்பதாகும்.
  • நன்னீர்ப் பயன்பாட்டில் 72% ஆனது வேளாண்மையில் பயன்படுத்தப்படுகிறது.
  • குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் 80% வேலைகள் ஆனது தண்ணீரைச் சார்ந்து உள்ளன.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 700 மில்லியன் மக்கள் கடுமையான தண்ணீர் பற்றாக் குறையால் இடம்பெயர்வர்.
  • 2040 ஆம் ஆண்டில், உலகளவில் 4 குழந்தைகளில் 1 குழந்தையானது மிக அதிக நீர் நெருக்கடியில் வாழும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்