TNPSC Thervupettagam

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் - மார்ச் 15

March 17 , 2018 2407 days 3962 0
  • நுகர்வோர்களின் அடிப்படை உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், நுகர்வோர்களுக்கு உள்ள அடிப்படை உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் மார்ச் 15 ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day – WCRD) கொண்டாடப்படுகின்றது.
  • 2018 ஆம் ஆண்டிற்கான உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருத்துரு “டிஜிட்டல் சந்தைகளை கவர்ச்சியுடையதாக உருவாக்குதல்”
  • முதல் உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது 1983 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
  • உலக நுகர்வோர் உரிமைகள் தினமானது 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் (Congress) நுகர்வோர் பாதுகாப்பு பற்றி ஜான்.எப். கென்னடி ஆற்றிய வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையை நினைவு கூறுவதற்காக   கொண்டாடப்படுகின்றது.
  • “நுகர்வோர் உரிமைகள்” பற்றி முறையாக விளக்கிய முதல் உலகத் தலைவர் இவரேயாவார்.
  • இந்தியாவில் டிசம்பர் 24-ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் (National Consumer Day) கொண்டாடப்படுகின்றது. ஏனெனில் இந்நாளில்தான் 1986 ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டமானது (Consumer Protection Act, 1986) குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்