சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் நோய்த்தடுப்பினை பெறுவதன் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு நோய்ப் பாதிப்பிலிருந்து அது எவ்வாறு விடுபடச் செய்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தடுப்பூசிகள் ஆனது ஆண்டுதோறும் சுமார் 35 முதல் 50 லட்சம் இறப்புகளைத் தடுக்கின்றன மற்றும் தட்டம்மை, போலியோ, டெட்டனஸ் மற்றும் டிப்தீரியா போன்ற பல்வேறு நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கின்றன.
2022 ஆம் ஆண்டில், உலகளவில் சுமார் 84% பச்சிளம் குழந்தைகளுக்கு (11 கோடி) டிப்தீரியா-டெட்டனஸ்-கக்குவான் இருமல் (DTP3) தடுப்பூசிகளின் மூன்று தவணைகள் வழங்கப் பட்டுள்ளது.