ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் உலக நோய்த் தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டிற்கான கருத்துருவானது, ”அனைவரையும் பாதுகாப்பது: நோய் தடுப்பு மருந்துகளின் பணி” என்பதாகும்.
இந்த ஆண்டிற்கான கருத்துருவின் இலக்குகளானது குழந்தைகள், சமூகங்கள் மற்றும் உலகம் ஆகியவற்றின் சுகாதாரத்திற்கான நோய்த் தடுப்பு மருந்துகளின் மதிப்பை வெளிக் கொணர்வதாகும்.
நோய்த் தடுப்பானது குழந்தைப் பருவம் முதல் வயது மூப்பு வரை 25 வகையான தொற்று நோய்களிலிருந்து காக்கின்றது.
உலக சுகாதார அமைப்பானது தனது 2012-ஆம் ஆண்டு, மே மாதச் சந்திப்பின் போது உலக நோய்த் தடுப்பு வாரக் கடைபிடிப்பினை அங்கீகரித்தது.