TNPSC Thervupettagam

உலக பட்டினி குறியீடு

October 13 , 2017 2471 days 1754 0
  • வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (International food policy Research Institute – IFPRI) ஆண்டுதோறும் உலக பட்டினி குறியீட்டை வெளியிடுகிறது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான இந்த குறியீட்டில் இந்தியா 119 நாடுகளில் 100 ஆது இடத்தை பிடித்துள்ளது.
  • 2016 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 97வது இடத்திலிருந்து 3 இடங்கள் பின்தங்கி 100 வது இடத்தைப் பிடித்துள்ளது.
உலக பட்டினி குறியீடு (GHI-Global Hungey Index)
  • GHI -உலக நாடுகளில் நிலவும் பட்டினி நிலைகளை விளக்கப் பயன்படுத்தப்படும் ஓர் பல்பரிமாண புள்ளியியல் முறை ஆகும்.
  • உலக நாடுகளின் பட்டினியை அழிக்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் தோல்வியை 4 அளவுருக்களின் அடிப்படையில் 0 முதல் 100 புள்ளிகள் வரையிலான மொத்த மதிப்பெண் அளவீட்டில்  இந்தக் குறியீடு கணக்கிடப்படுகின்றது.
  • நான்கு அளவுருக்கள் வருமாறு.
  1. ஊட்டச்சத்து குறைபாடு (Undernourishment)
  2. உயரத்திற்குத் தகுந்த எடை இல்லாமை (Child Wasting)
  3. குழந்தைகள் வளர்ச்சியின்மை (Child stunting )
  4. குழந்தைகள் இறப்பு (Child mortality)
  • இந்த மதிப்பெண் பட்டியலில்,
    • பூஜ்ஜியம் என்றால் சிறந்த நிலையினையும்
    • நூறு என்றால் மோசமான நிலையினையும் குறிக்கும்.
  • இந்த வழிமுறையிலான கணக்கீட்டின்படி இந்தியா 4 மதிப்பெண்கள் பெற்று பட்டினி நிலைகளில் “தீவிரமான” (Serious) வகைப்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் மட்டுமே இந்தியா இந்தியாவை விட பின்தங்கிய  இடங்களில்  உள்ளன.
  • கடைசி மூன்று ஆண்டுகளில் அதாவது 2014ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்தியா 55வது இடத்திலிருந்து 45 இடங்கள் சரிந்து  தற்போது 100வது இடத்தை அடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்