யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து ஐ.நா. பொது அவையில் 1993 ஆம் ஆண்டு டிசம்பரில் உலக பத்திரிகை சுதந்திர தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்றைய தினத்திலிருந்து வின்ட்ஹூக் பிரகடனத்தின் (மே 3) ஆண்டு விழாவானது, உலக பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: “அதிகாரத்தை கட்டுப்பாடோடு தொடர்தல்: ஊடகம், நீதித்துறை மற்றும் சட்டத்தின் கூறுகள்”.
2018 ஆம் ஆண்டிற்கான கருத்துருவானது, ஊடக சுதந்திரத்திற்கான சட்டப்பூர்வ சூழலை செயல்படுத்துவதின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் காட்டுகிறது.
அதோடு, ஊடக சுதந்திரத்திற்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்கு உறுதியளித்தலில் சுதந்திரமான நீதித்துறையின் பங்கிற்கு சிறப்பு கவனம் அளிக்கிறது. மேலும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குத் தொடரல்களின் மீதும் சிறப்புக் கவனம் செலுத்துகிறது.
நீடித்த வளர்ச்சிக்கான நிகழ்ச்சி நிரல் 2030-ல், பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பானது அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனங்கள் எனும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் 16 உடன் மிகவும் தொடர்புடைய ஒன்றாகும்.