TNPSC Thervupettagam

உலக பத்திரிக்கைச் சுதந்திர தினம் – மே 03

May 4 , 2021 1213 days 448 0
  • உலக பத்திரிக்கைச் சுதந்திர தினமானது உலக பத்திரிக்கை தினம் எனவும் அழைக்கப் படுகிறது.
  • இத்தினமானது தனது உயிரை இழந்த பத்திரிக்கையாளர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் உலக பத்திரிக்கைச் சுதந்திர தினத்திற்கான கருத்துரு,Information as a Public Good’ (தகவல் என்பது ஒரு பொதுச் சரக்கு) என்பதாகும்.
  • ஆப்பிரிக்கப் பத்திரிக்கையின் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உலக பத்திரிக்கைச் சுதந்திர தினத்தை நிறுவியது.
  • இதனையடுத்து சுதந்திரமான அளவில் பத்திரிக்கையை நடத்துவதற்காக வேண்டி உருவாக்கப்பட்ட வின்ட்ஹுக் பிரகடனம் (Windhoek Declaration) நிறைவேற்றப் பட்டதை அடுத்து இத்தினம் அறிவிக்கப் பட்டது.
  • இந்தப் பிரகடனம் மே 03 அன்று அறிவிக்கப்பட்டதால் இந்தச் சிறப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 03 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்