எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் (Reporters Without Borders) அமைப்பால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index -WPFI) 2017 ஆம் ஆண்டின் பத்திரிக்கைச் சுதந்திரத்தினுடைய நிலையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உலகம் தழுவிய கணக்கெடுப்பில் 180 நாடுகளுள் இந்தியா 138-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2017-ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் 136 வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா இந்த ஆண்டு இரண்டு இடம் பின்தங்கி 138-வது இடத்தை பிடித்துள்ளது.
2018-ஆம் ஆண்டிற்கான பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீட்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நார்வே முதலிடம் வகிக்கின்றது. சுவீடன் இரண்டாவது இடத்திலும், நெதர்லாந்து மூன்றாவது இடத்திலும், பின்லாந்து நான்காவது இடத்திலும், சுவிட்சர்லாந்து ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
பத்திரிக்கை சுதந்திரத்தின் மீது மிகவும் அடக்கு முறை கொண்ட (most repressive country) நாடாக வட கொரியா தொடர்ந்து நீடிக்கின்றது. வடகொரியாவைத் தொடர்ந்து எரித்திரியா (Eritrea), துர்க்மெனிஸ்தான், சிரியா மற்றும் சீனா ஆகியவை உள்ளன.
இந்தக் குறியீட்டில் சீனாவினுடைய தரவரிசையில் எந்த மாற்றமும் நிகழாமல் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 175-வது இடத்தில் உள்ளது.
2002-ஆம் ஆண்டிலிருந்து எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பினால் ஆண்டுதோறும் உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடு வெளியிடப்படுகின்றது.
உலக பத்திரிக்கைச் சுதந்திரக் குறியீடானது உலகின் 180 நாடுகளில் ஊடகங்களினுடைய சுதந்திரத்தின் அளவினை (level of media freedom) அளவிடுகின்றது.