2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி உலகின் முதலாவது பருப்பு தினம் கொண்டாடப் பட்டது.
2016ம் ஆண்டு நீடித்த உணவு உற்பத்தி, உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் பருப்புகளின் பங்களிப்பைக் காட்சிப்படுத்திட சர்வதேச பருப்பு வருடமாக அனுசரிக்கப்பட்டது.
சர்வதேச பருப்பு வருடத்தின் நேர்மறையான உத்வேகத்தைக் கட்டமைக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பிப்ரவரி 10ம் தேதியை உலக பருப்பு தினமாக அனுசரிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
2016 ஆம் ஆண்டு சர்வதேச பருப்பு வருடம் என்ற பரப்புரை உணவு மற்றும் விவசாயக் கழகத்தால் வெற்றிகரமாக அனுசரிக்கப்பட்டப் பிறகும், இந்த ஆரேக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த, புரதம் நிரம்பிய நைட்ரஜனைப் பொருத்துகின்ற அவரையம் எனப்படும் பருப்பு வகைகள் மீது ஏற்பட்ட நேர்மறையான உத்வேகத்தை நீடிக்கச் செய்திட இத்தினம் எண்ணுகின்றது.