TNPSC Thervupettagam

உலக பருப்பு வகைகள் தினம் – பிப்ரவரி 10

February 11 , 2020 1692 days 565 0
  • மத்திய விவசாய மற்றும் வேளாண் நலத் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் உலக பருப்பு வகைகள் தினத்தின் கொண்டாட்டங்களை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • மண் வளத்தை மேம்படுத்துவதில் பருப்பு வகைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
  • இவை ஊடுபயிர் முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் வேளாண் பன்முகத் தன்மையை ஊக்குவிக்க உதவுகின்றன.
  • ஐக்கிய நாடுகள் பருப்பு வகைகள் தினத் தீர்மானமானது 2013 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப் பட்டது. இத்தீர்மானமானது 2016 ஆம் ஆண்டை சர்வதேசப் பருப்பு வகைகள் ஆண்டாக அனுசரிக்க வழிவகை செய்கின்றது.
  • இத்தினமானது 2019 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது.
  • 2016 - 17 ஆம் ஆண்டு முதல் இந்தியா பருப்பு வகைகளில் தன்னிறைவை எட்டியுள்ளது.
  • 2016 ஆம் ஆண்டானது சர்வதேசப் பருப்பு வகைகள் ஆண்டாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்