TNPSC Thervupettagam

உலக பவளப்பாறை கண்காணிப்பு கட்டமைப்பு

October 14 , 2021 1012 days 564 0
  • உலக பவளப்பாறை கண்காணிப்பு கட்டமைப்பானது உலகம் முழுவதுமுள்ள பவளப் பாறைகளின் நிலை குறித்து ஒரு அறிக்கையினை   வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 13 ஆண்டுகளில் முதல்முறையாக உலக வெப்பமயமாதலின் மோசமான விளைவுகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளில் உலகம் தனது பவளப்பாறைகளில் சுமார் 14 சதவீதத்தினை இழந்துள்ளது.
  • கடலின் மேற்பரப்பு வெப்பநிலை உயர்வினால் ஏற்படும் பவள வெளுப்பு நிகழ்வுகள் தான் பவளப்பாறை அழிவிற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.
  • திடமான பவளப்பாறைப் பரவலில் சீரான சரிவு ஏற்பட்டுள்ளது.
  • திடமான பவளப்பாறைப் பரவலானது பவளப்பாறைகளின் ஒரு ஆரோக்கியமான நிலையைக் குறிக்கும்.
  • பவளப்பாறை முகடுகளில் பாசிகள் உருவாவது அந்த அமைப்புகளின் மீதான பாதிப்பினைக்  குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.
  • 2010 ஆம் ஆண்டு முதல் உலகின் பவளப்பாறைகள் மீது பாசி உருவாகும் அளவானது 20% வரை உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்