TNPSC Thervupettagam

உலக பாட்மிண்டன்: வெள்ளி வென்றார் சிந்து

August 28 , 2017 2686 days 972 0
  • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற இறுதிச்சுற்றில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்ட சிந்து வீழ்ந்தார்.
  • உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு சிந்து முன்னேறியது இது முதல் முறையாகும். தற்போது இறுதிச் சுற்று வரை முன்னேறியதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய 2 ஆவது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.
  • முதல் இந்தியராக, சாய்னா நெவால் ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஷிப்பில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
  • இதனிடையே, இந்த உலக சாம்பியின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு சாய்னா ஒரு வெண்கலம் பெற்றுத் தந்துள்ள நிலையில், சிந்து ஒரு வெள்ளியை வென்று தந்துள்ளார்.
  • உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா 2 பதக்கங்களைப் பெறுவதும் இது முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்