TNPSC Thervupettagam

உலக பாராளுமன்ற தினம் - ஜூன் 30

July 1 , 2018 2280 days 658 0
  • உலக பாராளுமன்ற தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • தேசியத் திட்டங்களில் பாராளுமன்றத்தின் பங்கு மற்றும் உத்திகளைக் கண்டுணர்தல் மற்றும் உலக மற்றும் தேசிய அளவில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவது இவற்றின் நோக்கங்களாகும்.
  • 2018-ஆம் ஆண்டு முதன்முறையாக உலக பாராளுமன்ற தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • உலக பாராளுமன்ற தினமானது பாராளுமன்றங்களின் பங்கைக் கண்டுணரும் பொருட்டு ஐ.நா.பொது அவையில் மே 2018 ல் ஒரு தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் கடைபிடிக்கப்படுகிறது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட தினமான ஜூன் 30ம் தேதி ஏறத்தாழ 130 வருடங்களுக்கு முன் இதேநாளில் 1889-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாராளுமன்றங்களின் உலக அமைப்பான இண்டர் பார்லிமெண்ட்டரி யூனியனுடன் (IPU - Inter Parlimentary Union) ஒன்றிப் பொருந்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்