ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வியாழக்கிழமை உலக பார்வை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கண்பார்வை குறைபாடு மற்றும் பார்வையின்மை மீது உலகின் கவனத்தைக் கொண்டு வர இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்த தினம் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) பார்வையின்மையை தடுப்பதற்கான சர்வதேச நிறுவனத்தின் (International Agency for the Prevention of Blindness - IAPB) ஒத்துழைப்புடன் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான சர்வதேச பார்வை தினத்தின் கருத்துரு “ பார்வையை கணக்கில் கொள்க” ( Make Vision Count ).