TNPSC Thervupettagam

உலக பாலின இடைவெளிக் குறியீடு- 2017

November 4 , 2017 2449 days 889 0
  • உலக பொருளாதார மன்றத்தால் (WEF-World Economic Forum) வெளியிடப்படும் உலக பாலின இடைவெளிக் குறியீட்டின் 2017-ல் ஆண்டுக்கான அறிக்கையின்  படி, மொத்தம் 144 நாடுகளில் இந்தியா, குறைவான வரிசையில் 108வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • கடந்த ஆண்டின் 87வது இடத்தை ஒப்பிடுகையில் இந்தியா இந்த வருடம் 21 இடங்கள் சறுக்கி, சீனா மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டைநாடுகளுக்கும் பின் தங்கிய வரிசையில் இடம் பிடித்துள்ளது.
  • இதற்கான முக்கியக் காரணம் நாட்டின் பொருளாதாரத்தில் பெண்களின் குறைந்த பங்களிப்பும், அவர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியமும் ஆகும்.
  • இரண்டு குறியீடுகளில் (Indicators) குறைவான மதிப்பை பெற்றதே இந்தியா பின்தங்கிய வரிசையில் இடம் பெற முக்கியமான காரணம் ஆகும்.
அவையாவன,
  • சுகாதாரம் மற்றும் ஆயுட்காலம் – இந்தியா கடைசி நான்கு இடத்தில் 141-வது நிலையில் உள்ளது.
  • பொருளாதாரத்தில் பெண்களுக்கான பங்களிப்பு மற்றும் வாய்ப்புகள் – சென்ற ஆண்டை ஒப்பிடுகையில் 136வது இடத்திலிருந்து 139வது இடத்திற்கு சரிவு.
உலக பாலின இடைவெளிக் குறியீடு
  1. கல்வி வாய்ப்பு
  2. உடல்நலம் மற்றும் ஆயுட்காலம்
  3. பொருளாதார வாய்ப்பு
  4. அரசியல் மேம்பாடு
என நான்கு  முக்கிய காரணிச் சுட்டிகளை அடிப்படையாகக் கொண்டு ஆண் மற்றும் பெண் பாலினத்தவருக்கிடையே  சமத்துவத்தை ஏற்படுத்தும் செயல் முயற்சியாக இந்த குறியீடு அளவீடு செய்யப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்