TNPSC Thervupettagam

உலக பாலைவனமாக்குதல் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் தினம் - ஜூன் 17

June 22 , 2018 2289 days 597 0
  • ஜூன் 17 அன்று ஒவ்வோர் ஆண்டும், உலக அளவில் பாலைவனமாக்குதலை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக பாலைவனமாக்குதல் மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் தினம் பின்பற்றப்பட்டு வருகிறது.
  • இந்த தினத்தின் முக்கிய நோக்கமானது நிலச் சீரழிவு நடுநிலைமையினை, சிக்கல்களைத் தீர்த்தல், வலிமையான சமுதாய ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பின் மூலமே அடைய முடியும் என்பதை நினைவு கூறவே ஆகும்.
  • WDCDD-2018-ன் கருத்துரு “நிலம் உண்மையான மதிப்புள்ளது - அதில் முதலீடு செய்யுங்கள்”.
  • WDCDD - World Day to Combat Desertification and Drought
  • ஈக்வேடார் அரசாங்கம் இதனை உலக அளவில் தொகுத்து வழங்குகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுக்குழு ஜூன்-17-ஐ WDCDD-ஆக 1994ல் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டது.
  • WDCDD முதன்முதலில் 1995-ல் பின்பற்றத் துவங்கப்பட்டது. இந்த தினமானது 1994-ல் ஐக்கிய நாடுகளின் பொதுக்குழுவால் பாலைவனமாக்குதலை எதிர்கொள்வதற்கான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட தினத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்