ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 01 அன்று உலக பால் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பினால் ஏற்படுத்தப்பட்டது.
இது சர்வதேச உணவுப் பொருளாக பால் இருப்பதற்கான முக்கியத்துவத்தை அங்கீகரிக்கின்றது.
இத்தினமானது பாலின் மீது கவனம் செலுத்துவதற்கும் ஆரோக்கியமான உணவுகள், பொறுப்பான உணவு உற்பத்தி, வாழ்வாதாரம் மற்றும் சமூகத்தை ஆதரிப்பதில் பாலின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பினை அளிக்கின்றது.