TNPSC Thervupettagam

உலக பிரெய்லி தினம் - ஜனவரி 04

January 7 , 2023 595 days 267 0
  • பார்வையற்றோருக்கான மனித உரிமைகளை உணர்ந்து கொள்வதில் தகவல் தொடர்பு சாதனமாக விளங்கும் பிரெய்லி எழுத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது.
  • ஜனவரி 04 ஆம் தேதியானது, பிரெய்லி எழுத்து முறையைக் கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி அவர்களின் பிறந்த நாளாகும்.
  • பிரெய்லி அவர்கள் 1809 ஆம் ஆண்டு ஜனவரி 04 ஆம் தேதியன்று பிரான்சு நாட்டில் பிறந்தார்.
  • பார்வையற்ற நபர்கள் படிப்பதற்கும் எழுதுவதற்குமான ஒரு வாய்ப்பினை அளித்து, அவர்கள் பிறரை சார்ந்து இருக்கும் நிலையை தவிர்த்துச் சுதந்திரமாக செயல்படும் நிலையை அதிகரித்து, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை அணுகச் செய்வதற்கான வாய்ப்பினை வழங்கும் ஒரு முறையினை அவர் உருவாக்கினார்.
  • பிரெய்லி என்பது குவிய வடிவில் அமைக்கப்பட்ட ஆறு புள்ளிகளைப் பயன்படுத்தி அகர வரிசை மற்றும் எண் குறியீடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்