ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம் நாள் அனுசரித்தது.
கண்பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக பிரெய்லி முறையைக் கண்டறிந்தவரான லூயிஸ் பிரெய்லியின் பிறந்த நாளினை நினைவு கூறும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
இது சில வகையான கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வையைக் கொண்ட ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்களுக்கு பிரெய்லியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.
லூயிஸ் பிரெய்லி, 1809 ஆம் ஆண்டு ஜனவரி 04 அன்று பிரான்ஸில் பிறந்தார். இவர் தனது 3-வது வயதில் கண் பார்வையை இழந்தார்.