உலக புத்தகத் தினம் அல்லது உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் அல்லது சர்வதேசப் புத்தக தினமானது ஏப்ரல் 23 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியானது வாசித்தல், பிரசுரித்தல் மற்றும் காப்புரிமை ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினால் (United Nations Educational, Scientific and Cultural Organization - UNESCO) ஒருங்கிணைக்கப்படுகின்றது.
1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று இத்தினமானது முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
இத்தினத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களான வில்லியம் ஷேக்ஸ்பியர், மிக்யூல் செர்வன்டிஸ் மற்றும் இன்கா கார்சிலசோ டி லா வேகா ஆகியோர் இறந்தனர்.
2019 ஆம் ஆண்டின் புத்தகத் தினமானது “பூர்வகுடி மொழிகளைப் பாதுகாத்தல்” என்பவற்றில் சிறப்புக் கவனம் செலுத்துவதுடன் இலக்கியம் மற்றும் வாசிப்பை கொண்டாடுவதற்குத் திட்டமிட்டுள்ளது.