TNPSC Thervupettagam

உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் – ஏப்ரல் 23

April 28 , 2018 2402 days 797 0
  • உலக மக்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும், புத்தகங்களின் வெளியீடு மற்றும் பதிப்புரிமையை (copyright)   மேம்படுத்தவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம்  (World Book and Copyright Day)  கொண்டாடப்படுகின்றது.
  • ஆண்டு தோறும் ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று யுனெஸ்கோ (UNESCO) அமைப்பும், பிற சர்வதேச அமைப்புகளும் உலகின் ஏதேனும் ஒரு பகுதியை உலக புத்தக தலைமையகமாக (World Book Capital)  ஓர் ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கும்.
  • இந்த வகையில், யுனெஸ்கோ அமைப்பானது இந்த ஆண்டு கிரிஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் (Athens)  நகரை 2018-ஆம் ஆண்டிற்கான உலக புத்தக தலைநகராக (World Book Capital for 2018)   அறிவித்துள்ளது.
  • உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தை ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் (UNESCO)  தோற்றுவித்தது. 1995 ஆம் ஆண்டு இத்தினம் முதன் முறையாக கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்