TNPSC Thervupettagam

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் – ஏப்ரல் 23

April 26 , 2021 1222 days 460 0
  • உலக புத்தக தினம் யுனெஸ்கோவினால் கொண்டாடப்படுகிறது.
  • ஏப்ரல் 23 ஆனது உலக இலக்கியத்திற்கான அடையாள தேதியாகும்.
  • 1616 ஆம் ஆண்டில் இத்தினத்தில்தான் செர்வான்டிஸ், சேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சைலாசோ டிலா வேகா ஆகிய அனைவரும் உயிரிழந்தனர்.
  • எனவே இந்த மகத்தான இலக்கிய அறிஞர்களுக்குக் கௌரவமளிக்கும் வகையில் இத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • ஜியார்ஜியாவின் தலைநகரமான திப்லிசி (Tbilisi) ஆனது 2021 ஆம் ஆண்டிற்கான  உலக புத்தகத் தலைநகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • தற்போதைய பெருந்தொற்றினை நினைவில் வைத்து இந்த ஆண்டிற்கான உலக புத்தக தினத்தின் கருத்துருவாக “To Share a Story” என்ற வாக்கியம் இருக்கும்.
  • இந்த ஆண்டு உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினத்தைக் கொண்டாடும் வகையில் யுனெஸ்கோவானது “Bookface” என்ற ஒரு சவாலை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்