புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும் அதன் தடுப்பு, கண்டுபிடிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவற்றை ஊக்கப்படுத்தவும் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 04 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இந்த வருடம் இத்தினம் ‘நான் முயல்கிறேன் மற்றும் நான் முயலுவேன்’ என்ற மூன்றாண்டு கால பரப்புரையின் வெளியீட்டினை அனுசரிக்கின்றது.
இந்த தினமானது 2008 ஆம் ஆண்டின் உலக புற்றுநோய் தீர்மானத்தின் இலக்குகளை முறையாக பதியச் செய்வதன் மூலம் சர்வதேச புற்றுநோய்க் கட்டுப்பாட்டு ஒன்றியத்தால் (Union for International Cancer Control - UICC) ஏற்படுத்தப்பட்டது.
இந்த தினத்தை அனுசரிப்பதற்கான முக்கிய நோக்கம் 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்நோயின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் மரணத்தையும் குறைப்பதாகும்.
2000 ஆம் ஆண்டில் பிரான்சின் பாரீசில் நடத்தப்பட்ட புற்றுநோயிற்கு எதிரான முதல் உலக மாநாட்டில் இந்த தினம் முதன்முதலாக அனுசரிக்கப்பட்டது.