இது பெருமூளை வாத (CP) பாதிப்புடன் வாழும் தனிநபர்களின் உரிமைகளுக்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் போராடுவதற்கான தினமாகும்.
இந்த நாள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நினைவூட்டுவதாகவும், இந்தச் சமூகத்தில் அவர்களுக்கான ஆதரவு மற்றும் ஏற்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
பெருமூளை வாதம் என்பது இயக்கம் மற்றும் தோற்றத்தில் ஏற்படும் மாற்ற நிலை ஆகும்.
இந்த பெருமூளை வாத நோயில், மூளையானது வெவ்வேறு குழந்தைகளில் வெவ்வேறு விதமாக வளர்ச்சியடைகிறது.
உலகளவில், சுமார் 1.7 கோடி பேர் ஏதேனும் ஒரு வகை பெருமூளை வாத பாதிப்பினைக் கொண்டுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Uniquely CP" என்பதாகும்.