உலக நாணய நிதியத்தால் [IMF – International Monetary Fund] 2017 ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார கண்ணோட்ட அறிக்கை (World Economic Outlook Report ) வெளியிடப்பட்டுள்ளது.
ஆண்டிற்கு இருமுறை (Biannually) வெளியிடப்படும் இந்த அறிக்கையானது 200 நாடுகளை அவற்றின் பொருள் வாங்குத்திறன் சமநிலையினை (PPP– Purchasing Power Parity) ஆதாரமாகக் கொண்டு தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Per Capita GDP) அடிப்படையில் தரவரிசைப்படுத்துகின்றது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையின்படி, இந்தியா தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒரு இடம் முன்னேறி 126-வது இடத்தை அடைந்துள்ளது.
இருப்பினும் இவ்வறிக்கைப்படி, பிரிக்ஸ் நாடுகளுள் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.
IMF தரவுகளின் அடிப்படையில் கத்தார் தொடர்ந்து உலக பணக்கார நாடாக திகழ்ந்து வருகின்றது.
PPP – Purchasing Power Parity
ஒரு நாட்டின் பணமானது மற்றொரு நாட்டில் மாற்றப்படத் தேவையான நாணய மாற்ற விகிதமே பொருள் வாங்குத்திறன் சமநிலை (PPP) எனப்படும்.
இது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் வருமான அளவை பிற நாடுகளுடன் ஒப்பிட பயன்படும்.
நாணய மாற்று விகிதத்தை (Exchange Rate) கணக்கில் கொள்ளும் போது, ஒரே பொருளின் நுகர்வின் மீதான செலவு இரு நாடுகளிலும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய இவை உதவும்.