உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை
December 13 , 2017 2569 days 1005 0
உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை (World Economic Situation and Prospects Report) ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமுதாய விவகாரத்துறை (United Nations Department of Economic and Social Affairs – UN-DESA) மற்றும் ஐ.நா.வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD – United Nations Conference on Trade & Development) கூட்டிணைவால் வெளியிடப்படுகின்றது.
70-வது ஆண்டின் பிரசுரிப்பாக இவ்வாண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார நிலையைப் பற்றி இந்த அறிக்கை விவரம் தெரிவிக்கும்.
இந்த அறிக்கையானது 7 சதவீதம் என்ற நிலையில் உள்ள இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி ஆனது 2018-19-ல் 7.2 சதவீதமாகவும், 2019-20-ல் 7.4 சதவீதமாகவும் இருக்குமென கூறியுள்ளது.
UN-DESA
உலகின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை களைவதற்கான பொறுப்புடைய ஐ.நா செயலகத்தின் ஓர் அமைப்பே UN-DESA ஆகும்.
UN-DESA அமைப்பானது நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் அமைந்துள்ளது.
நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு வேண்டிய சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
உலக நாடுகள் தனிப்பட்ட தேசிய மேம்பாட்டு உத்திகளை வகுத்திடவும் அவற்றை செயல்படுத்திடவும் UN-DESA உலக நாடுகளுக்கு தனிப்பட்ட அளவிலும், பிராந்திய அளவிலும் உதவி புரியும்.
மேலும் இது “நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கை“ (Sustainable Development Goals Report) ஒன்றையும் வெளியிடுகின்றது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் வருடாந்திர உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான முன்னேற்றங்களின் மதிப்பீடே நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கையாகும்
UNCTAD
UNCTAD ஆனது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு குழுவின் (UNDG – United Nations development Group) ஓர் பகுதியாகும்.
இதன் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது.
வர்த்தகம், முதலீடு, மேம்பாடு போன்றவற்றினில் வளரும் நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகளை பிரத்யேகமாக கையாளுவதற்கென UNCTAD உருவாக்கப்பட்டுள்ளது.
UNCTAD வெளியிடும் பிற அறிக்கைகள்
வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை (Trade and development Report)
உலக முதலீட்டு அறிக்கை (World Investment Report)
குறைவான வளர்ச்சியுடைய நாடுகள் அறிக்கைகள் (The Leased developed Countries Report)
தகவல் மற்றும் பொருளாதார அறிக்கை (Information and Economy Report)
தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் அறிக்கை. (Technology and Innovation Report)
பொருட்கள் மற்றும் மேம்பாட்டு அறிக்கை (Commodities and development Report)