TNPSC Thervupettagam

உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை

December 13 , 2017 2538 days 985 0
  • உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை (World Economic Situation and Prospects Report) ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமுதாய விவகாரத்துறை (United Nations Department of Economic and Social Affairs – UN-DESA) மற்றும் ஐ.நா.வர்த்தக மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD – United Nations Conference on Trade & Development) கூட்டிணைவால் வெளியிடப்படுகின்றது.
  • 70-வது ஆண்டின் பிரசுரிப்பாக இவ்வாண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • உலக நாடுகளின் பொருளாதார நிலையைப் பற்றி இந்த அறிக்கை விவரம் தெரிவிக்கும்.
  • இந்த அறிக்கையானது 7 சதவீதம் என்ற நிலையில் உள்ள  இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி    ஆனது  2018-19-ல் 7.2 சதவீதமாகவும், 2019-20-ல் 7.4 சதவீதமாகவும்  இருக்குமென கூறியுள்ளது.
UN-DESA
  • உலகின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை களைவதற்கான பொறுப்புடைய ஐ.நா செயலகத்தின் ஓர் அமைப்பே UN-DESA ஆகும்.
  • UN-DESA அமைப்பானது நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் அமைந்துள்ளது.
  • நீடித்த வளர்ச்சியை அடைவதற்கு வேண்டிய சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • உலக நாடுகள் தனிப்பட்ட தேசிய மேம்பாட்டு உத்திகளை வகுத்திடவும் அவற்றை செயல்படுத்திடவும் UN-DESA உலக நாடுகளுக்கு தனிப்பட்ட அளவிலும், பிராந்திய அளவிலும் உதவி புரியும்.
  • மேலும் இது “நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கை“ (Sustainable Development Goals Report) ஒன்றையும் வெளியிடுகின்றது.
  • நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு உலக நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் வருடாந்திர உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான முன்னேற்றங்களின் மதிப்பீடே நீடித்த வளர்ச்சி இலக்குகள் அறிக்கையாகும்
UNCTAD
  • UNCTAD ஆனது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு குழுவின் (UNDG – United Nations development Group) ஓர் பகுதியாகும்.
  • இதன் தலைமையகமானது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ளது.
  • வர்த்தகம், முதலீடு, மேம்பாடு போன்றவற்றினில் வளரும் நாடுகள் சந்திக்கும் பிரச்சனைகளை பிரத்யேகமாக கையாளுவதற்கென UNCTAD உருவாக்கப்பட்டுள்ளது.
  • UNCTAD வெளியிடும் பிற அறிக்கைகள்
  • வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அறிக்கை (Trade and development Report)
  • உலக முதலீட்டு அறிக்கை (World Investment Report)
  • குறைவான வளர்ச்சியுடைய நாடுகள் அறிக்கைகள் (The Leased developed Countries Report)
  • தகவல் மற்றும் பொருளாதார அறிக்கை (Information and Economy Report)
  • தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் அறிக்கை. (Technology and Innovation Report)
  • பொருட்கள் மற்றும் மேம்பாட்டு அறிக்கை (Commodities and development Report)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்