உலக போதை மருந்து எதிர்ப்பு நிறுவனம் -ருமேனியா ஆய்வகம்
February 20 , 2018 2469 days 790 0
வேண்டத்தகு தரநிலைகளை கொண்டிருக்காத காரணத்தினால் ருமேனியா நாட்டின் போதை மருந்து பரிசோதனை ஆய்வகத்தை (drug-testing laboratory) உலக போதை மருந்து எதிர்ப்பு நிறுவனம் (World Anti-Doping Agency) 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது.
உலக போதை மருந்து எதிர்ப்பு நிறுவனத்தினுடைய பல்வேறு ஒழுங்குமுறைகளுக்கு உறுதிப்பாடற்ற வகையில் ஒத்திசைந்து செயல்படாத காரணத்தினால் ரோமானியா தலைநகர் புசாரெஸ்டில் உள்ள இந்த ஆய்வகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
WADA பற்றி
சுவிட்சர்லாந்து நாட்டின் லவ்சன்னெவில் 1999ஆம் ஆண்டு சுதந்திரமான சர்வதேச போதை மருந்துப் பயன்பாட்டுத் தடுப்பு அமைப்பாக உலக போதை மருந்து எதிர்ப்பு நிறுவனம் நிறுவப்பட்டது.
உலக அரசுகள் மற்றும் சர்வதேச விளையாட்டு இயக்கங்களினால் சமமான முறையில் இந்த அமைப்பிற்கு நிதியளிக்கப்படுகின்றது.
1999ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டின் லவ்சன்னேவில் விளையாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மீதான முதல் உலக கருத்தரங்கு (World Conference on doping Sports) நடைபெற்றது.
அந்த கருத்தரங்கில் விளையாட்டில் போதைப் பொருள் பயன்பாடு மீதான லவ்சன்னே பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
உலகின் அனைத்து நாடுகள் மற்றும் விளையாட்டுப் போட்டி அமைப்புகளில் உள்ள போதை மருந்து எதிர்ப்புக் கொள்கைகளை ஒத்திசைக்கும் ஆவணமான உலக போதை மருந்து எதிர்ப்பு தொகுப்பைக் (World Anti-doping Code) கண்காணிப்பதும், உலக நாடுகளின் போதை மருந்து பயன்பாட்டு எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதும் அவற்றில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதும் இந்த நிறுவனத்தின் முக்கிய பணிகளாகும்.