TNPSC Thervupettagam

உலக போலியோ (இளம்பிள்ளை வாதம்) தினம் - அக்டோபர் 24

October 30 , 2020 1401 days 461 0
  • 2020 ஆம் ஆண்டின் உலக போலியோ தினத்திற்கான கருத்துரு 'முன்னேற்றக் கதைகள்: கடந்த காலமும் நிகழ்காலமும்' என்பதாகும். மற்றும் சில இடங்களில் அது 'போலியோவுக்கு எதிரான வெற்றி உலக ஆரோக்கியத்திற்கு கிடைத்த வெற்றி' என்றும் உள்ளது.
  • ரோட்டரி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தால் ஜோனாஸ் சால்க் என்பவர் பிறந்ததை நினைவு கூரும் வகையில் இது நிறுவப் பட்டுள்ளது
  • இவர் போலியோமைலிடிஸுக்கு எதிராக தடுப்பூசி ஒன்றை உருவாக்கிய முதல் குழுவிற்கு தலைமைத் தாங்கியவர் ஆவார்.
  • 1988 ஆம் ஆண்டில், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்புகளால் உலகளாவிய போலியோ ஒழிப்பு முயற்சியானது தொடங்கப்பட்டது.
  • போலியோ பெரும்பாலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது.
  • போலியோ வைரஸில் மூன்று வகைகள் உள்ளன (வகை 1, வகை 2 மற்றும் வகை 3).
  • வகை 2 மற்றும் வகை 3 வைரஸ்கள் உலகளவில் ஒழிக்கப்பட்டு விட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளன.
  • உலகில் 3 நாடுகள் மட்டுமே போலியோ தொற்றைக் கொண்டுள்ளன.
  • அவை பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகும்.
  • 2014 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்து இந்தியா போலியோ நீக்கப் பட்டதற்கானச் சான்றிதழைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்