TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் – அக்டோபர் 24

October 26 , 2021 1037 days 391 0
  • இத்தினமானது ஜோனஸ் சால்க் என்பவரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ரோட்டரி இண்டர்நேஷனல் என்ற அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • இவர் போலியோமைலிடிசிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதற்கான முதல் குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு நாள், ஒரு ஈடுபாடு: போலியோவை ஒழித்தல்போலியோ இல்லாத உலகம் என்ற எங்களது வாக்குறுதியை நிறைவு செய்தல்என்பதாகும்.
  • போலியோமைலிடிஸ் (Poliomyelitis) என்பது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளைத் தாக்கும் ஒரு தொற்று நோயாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் இந்தியா போலியோ அற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.
  • இந்த நோயை முழுமையாக (100%) ஒழிக்கும் நோக்கத்துடன் 1995 ஆம் ஆண்டில்பல்ஸ் போலியோஎன்ற திட்டமானது தொடங்கப்பட்டது.
  • வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தினைப் பயன்படுத்தி பல்ஸ் (தொடர்) தடுப்பூசி இயக்கம் 1981 ஆம் ஆண்டில் வேலூரில் நடத்தப்பட்டது.
  • போலியோ அல்லாத முதல் இந்திய நகரம் வேலூர் ஆகும்.
  • 2011 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் தான் கடைசியாக போலியோ நோய் பதிவானது.
  • இந்த போலியோ வைரசின் வலுவான கடைசியான பாதிப்பினை ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இன்னும் எதிர்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்