TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சித் தரவரிசை 2025

March 23 , 2025 10 days 86 0
  • பின்லாந்து தொடர்ந்து எட்டாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக தனது நிலையைத் தக்க வைத்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஹமாஸ் மோதல் இருந்த போதிலும் இஸ்ரேல் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • 2012 ஆம் ஆண்டில் 11வது இடத்தில் இருந்த அமெரிக்கா, இதில் 24வது இடத்தில் கடைசி இடத்திற்குச் சரிந்துள்ளது.
  • ஆப்கானிஸ்தான் இந்தத் தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளது.
  • முந்தைய ஆண்டில் 126வது இடத்திலிருந்த இந்தியா, சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் 118வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இதில் இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 133வது இடத்திலும், வங்காள தேசம் 134வது இடத்திலும், பாகிஸ்தான் 109வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன.
  • இது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் நல்வாழ்வு ஆராய்ச்சி மையத்துடன் கேலப், ஐ. நா. அமைப்பின் நிலையான மேம்பாட்டுத் தீர்வுகள் வலையமைப்பு மற்றும் ஒரு தன்னாட்சிக் கொண்ட தலையங்கக் குழு ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்