TNPSC Thervupettagam

உலக மக்களின் மன நிலை குறித்த அறிக்கை

March 15 , 2023 492 days 281 0
  • சேப்பியன் லேப்ஸ் நிறுவனமானது, தனது மூன்றாவது வருடாந்திர உலக மக்களின் மன நிலை குறித்த அறிக்கையினை (MSW) வெளியிட்டுள்ளது.
  • பெருந்தொற்றுக் காலத்தின் போது மனநலக் குறைவு பாதிப்பில் சிறிதளவே மீட்சி ஏற்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கண்டறிந்துள்ளது.
  • இக்குழுவானது "மனநல ஈவு (குறிப்பீடு)" எனப்படும் மதிப்பெண் மூலம் மக்களின் மன நிலை குறித்து மதிப்பிடுகிறது.
  • கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரி மதிப்பெண் 33 புள்ளிகள் குறைந்துள்ளது. இருப்பினும் இன்னும் மீட்சிக்கான அறிகுறிகள் வெளிப்படவில்லை.
  • 18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களும் குறைவான "சமூக சுய மதிப்பீட்டினை" கொண்டு இருந்தனர்.
  • இது ஒரு நபர் தன்னைப் பற்றி எவ்வாறு உணர்கிறார் மற்றும் அர்த்தமுள்ள உறவுகளைப் பேணுவதற்கான ஒரு நபரின் திறனை அளவிடும் அளவீடாகும்.
  • உலக சராசரி மனநல ஈவானது 64 ஆக உள்ளது.
  • தான்சானியா, பனாமா, புயுரிட்டோ ரிக்கோ, டொமினிகன் குடியரசு மற்றும் வெனிசுலா ஆகியவை மனநல ஆரோக்கியத்தில் முதல் 5 இடங்களைப் பெற்ற நாடுகளாகும்.
  • பிரிட்டன், அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் மனநலத் தரவரிசையில் கடைசி இடங்களைப் பெற்ற நாடுகள் ஆகும்.
  • இதில் இந்தியா 49வது இடத்திலும், பாகிஸ்தான் 48வது இடத்திலும் உள்ளன.
  • பெரு, இந்தியா, பொலிவியா ஆகிய நாடுகளில் 55-64 வயதுடையவர்களுடன் ஒப்பிடச் செய்கையில், 18-24 வயதுடைய 42% இளைஞர்கள் மனநலம் பாதிக்கப் பட்டவர்களாக அல்லது மன நலம் பேணும் ஒரு முயற்சியில் போராடிக் கொண்டு இருப்பவர்களாக உள்ளனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்த அறிக்கையில் சீனா பற்றிய விவரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்