TNPSC Thervupettagam

உலக மக்கள்தொகை – 8 பில்லியன்

November 19 , 2022 611 days 292 0
  • 2022 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியன்று, உலகின் மக்கள் தொகை 8 பில்லியன் (800 கோடி) என்ற அளவை எட்டியிருக்கின்றது.
  • உலக மக்கள்தொகை, 2030 ஆம் ஆண்டு வாக்கில் 8.5 பில்லியன் என்ற அளவிற்கும், 2050 ஆம் ஆண்டு வாக்கில் 9.7 பில்லியன் என்ற அளவிற்கும், 2100 ஆம் ஆண்டு வாக்கில் 10.4 பில்லியன் என்ற அளவிற்கும் உயர்ந்திடும்.
  • எனினும், உலகின் மக்கள்தொகை 7 பில்லியனிலிருந்து 8 பில்லியனிற்கு உயர்ந்திட 12 வருடங்களை எடுத்துக் கொண்டாலும், அடுத்து 9 பில்லியன் அளவினை எட்டிட தோராயமாக 12 வருடங்களை, அதாவது 2037 ஆம் ஆண்டில், அதை எட்டும்.
  • வருடாந்திரமான உலக மக்கள்தொகை வள அறிக்கையும் 1950 ஆம் ஆண்டிலிருந்து உலகின் மக்கள்தொகை மிகக் குறைவான வேகத்தில் மட்டுமே உயர்ந்து வருகின்றது என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் இது ஒரு சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில், மிக அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டு பிராந்தியங்களுமே, 2.3 பில்லியன் மக்கள்தொகையுடன் தென்கிழக்கு ஆசியாவும் 2.1 பில்லியன் மக்கள் தொகையுடன் மத்திய மற்றும் தெற்காசியாவும் என ஆசியாவிலேயே அவை அமைந்து உள்ளன.
  • ஐக்கிய நாடுகள் அவையின் கணிப்பின்படி, 2023 ஆம் ஆண்டு வாக்கில் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை விஞ்சி இந்தியா உருவெடுக்க இருக்கின்றது.
  • உலகின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்கினை சீனாவும் இந்தியாவும் கொண்டு உள்ளன.
  • சீனாவிற்கான உலக வங்கியின் கணிப்பின்படி 1.4 பில்லியன் மக்கள்தொகையை விட இந்தியா ஆனது மக்கள்தொகையை 1.38 பில்லியன் எனக் கணித்துள்ளது.
  • 2050 ஆம் ஆண்டு வரையில் உலக மக்கள்தொகையில் பாதியளவிற்கும் மேலான அளவில் எகிப்து, காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, இந்தியா, பாகிஸ்தான், தான்சானியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் மட்டும் கணிக்கப்பட்ட அதிகரிப்பு இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்