ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆனது 2024 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை குறித்த நிலை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கு "ஒன்றிணைந்த வாழ்க்கை முறைகள், நம்பிக்கையின் இழைகள்: பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகளில் உள்ள பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்" என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
144.17 கோடி மக்கள்தொகையுடன் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது என்ற நிலையில் அதனைத் தொடர்ந்து 142.5 கோடி மக்கள் தொகையுடன் சீனா இடம் பெற்று உள்ளது.
இந்திய மக்கள் தொகையில் 24 சதவீதம் பேர் 0 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள், 17 சதவீதம் பேர் 10 முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
இந்தியாவின் மக்கள் தொகையானது 77 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
10 முதல் 24 வயதிற்குட்பட்டப் பிரிவினர் 26 சதவிகிதமும், 15 முதல் 64 வயதிற்குட்பட்டப் பிரிவினர் 68 சதவிகிதமும் உள்ளனர்.
கூடுதலாக, இந்தியாவின் மக்கள்தொகையில் 7 சதவீதம் பேர் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர் என்ற நிலையில் ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகள் மற்றும் பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகள் ஆகும்.
2006-2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்தியாவில் குழந்தைத் திருமண சதவீதம் 23 ஆக இருந்தது.
இந்தியாவில் பேறுகாலத் தாய்மார் இறப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்ற வகையில் இது உலகளாவிய அனைத்து உயிரிழப்புகளில் 8 சதவிகிதம் ஆகும்.
100,000 பிறப்புகளுக்கு சுமார் 1,671 என்ற அதிகபட்ச அளவிலான உயிரிழப்புகளானது அருணாச்சலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.