உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
1987 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதியன்று, உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனை எட்டியது.
ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் முதன்முதலில் 1989 ஆம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "தரவுச் சேகரிப்பில் முதலீடு செய்வது பல சிக்கல்களைப் புரிந்து கொள்வதற்கும், பல்வேறு தீர்வுகளை உருவாக்குவதற்கும், பெரும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியம் ஆகும்" என்பதாகும்.