மக்கள் தொகை பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் நாள் உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிற்கான உலக மக்கள் தொகை தினத்தின் கருத்துரு “குடும்பக் கட்டுப்பாடு என்பது மனித உரிமை” ஆகும்.
1989ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டங்கள் அமைப்பின் நிர்வாக மன்றத்தினால் உலக மக்கள் தொகை தினம் தொடங்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு ஜூலை 11ம் தேதி உலக மக்கள் தொகை தோராயமாக 5 மில்லியனை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாக பொது நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது.