TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை மதிப்பாய்வு

January 23 , 2023 676 days 411 0
  • அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு வாரியமான உலக மக்கள்தொகை கடிகார நிறுவனமானது சமீபத்தில் தனது "உலக மக்கள்தொகை மதிப்பாய்வு" அறிக்கையை வெளியிட்டது.
  • இந்த அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி உலக மக்கள் தொகை 7.9 பில்லியனாக இருந்தது.
  • இது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் 8 பில்லியனை எட்டும்.
  • 2015 ஆம் ஆண்டில், உலக மக்கள் தொகை 7.2 பில்லியனாக இருந்தது.
  • 1 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையினை கொண்ட நாடுகள் இந்தியாவும் சீனாவும் மட்டுமே ஆகும்.
  • 1.42 பில்லியன் மக்கள் தொகையுடன் சீனா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்குகிறது.
  • இந்தியாவின் மக்கள் தொகை 1.41 பில்லியன் ஆகும்.
  • 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா சீனாவைப் பின்னுக்குத் தள்ளி, அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்.
  • உலக நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் ஆனது குறைந்து வருகிறது.
  • 2080-2100 ஆகிய ஆண்டுகளுக்குள் இந்த அளவு சுழிய அளவினை எட்டும் ஆனால் 2100 ஆம் ஆண்டிற்குப் பிறகு வளர்ச்சி விகிதம் பிற்போக்கில் இருக்கும்.
  • 2100 ஆம் ஆண்டில் வாக்கில் உலக நாடுகளின் மக்கள் தொகை 10.4 பில்லியனை எட்டும்.
  • 500 மக்கள் தொகையுடன் உலகின் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாக வாடிகன் நகரம் திகழ்கிறது.
  • உலக மக்கள்தொகையானது, நிமிடத்திற்கு சுமார் 140 பேர் என்ற அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • வளர்ச்சி விகிதம் ஆனது 2020 ஆம் ஆண்டில் 1% க்கும் கீழே சரிந்தது.
  • 1950 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக இவ்வாறு பதிவாகியுள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள மக்களின் ஆயுட்காலம் 72.8 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
  • இது 1990 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட ஒன்பது ஆண்டுகள் அதிகமாகும்.
  • உலகளவில் உள்ள மக்களின் ஆயுட்காலமானது 2050 ஆம் ஆண்டில் 77.2 வருடங்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்