2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் சங்கம் (IUSS) ஆனது இந்த நாளின் அனுசரிப்பிற்குப் பரிந்துரைத்தது.
இது தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமி போல் அதுல்ய தேஜ் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூருகிறது.
உணவுப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் பலவற்றிற்கு அவசியமான நிலையான மண் மேலாண்மை மற்றும் புத்துயிர்ப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் பணியாற்றினார்.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Caring for soils: measure, monitor, manage” என்பதாகும்.
இந்தியாவின் மண் வளமானது, மிக நீண்ட காலமாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸின் அதிகப் படியான பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
1990 ஆம் ஆண்டுகளில் பொட்டாசியம் குறைபாடு அதிகமாக நிலவியது என்பதோடு மேலும் 2000 ஆம் ஆண்டுகளில் சல்பர் குறைபாடு ஒரு மிகப்பெரியப் பிரச்சனையாக உருவானது.