TNPSC Thervupettagam

உலக மண் தினம் 2023 – டிசம்பர் 05

December 6 , 2023 227 days 123 0
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, ‘மண்ணும் நீரும், வாழ்வின் ஆதாரம்’ என்பதாகும்.
  • இத்தினம் சர்வதேச மண் அறிவியல் சங்கத்தின் (IUSS) முயற்சியால் நிறுவப்பட்டது.
  • 2002 ஆம் ஆண்டில் சர்வதேச மண் அறிவியல் சங்கமானது, 2002 ஆம் ஆண்டில் மண்ணின் சிறப்பைக் கொண்டாடுவதற்காக ஒரு சர்வதேச தினத்தை நிறுவுவதற்குப் பரிந்துரைத்தது.
  • தாய்லாந்து இராட்சியத்தின் தலைமைத்துவத்துடனும், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) ஆதரவுடனும், உலகளாவிய மண் கூட்டாண்மை கட்டமைப்பிற்குள் உலக மண் தினம் ஓர் உலகளாவிய விழிப்புணர்வுத் தளமாக உருவானது.
  • தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி டிசம்பர் 05 ஆம் தேதியானது இத்தினத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மாநாடு ஆனது, உலக மண் தினத்தை அங்கீகரித்து, பின்னர் 68வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையை அணுகி அதனை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ள கோரியது.
  • குன்மிங்-மாண்ட்ரியல் உலகப் பல்லுயிர் கட்டமைப்பானது, பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும் அதனை மீட்டெடுப்பதற்குமான அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்