உலக மதியிறுக்க நிலை விழிப்புணர்வு தினம் – ஏப்ரல் 02
April 3 , 2024 236 days 350 0
மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளைக் கொண்டாடுவதற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மதியிறுக்கம் என்பது தகவல் தொடர்பு மற்றும் சமூகம் சார்ந்த தகவல் தொடர்பு ஆகியவற்றினைப் பாதிக்கின்ற நரம்பியல் வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
மதியிறுக்க நோயின் அறிகுறிகளில் சமூகம் சார்ந்த மனக் குழப்பம், பயம் மற்றும் கவனம் செலுத்துவதில் சிரமம் ஆகியவை அடங்கும்.
இந்த நிலையானது, ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கின்ற மற்றும் குறிப்பிடத் தக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உலக மதியிறுக்க நோய் விழிப்புணர்வு தினமானது, மதியிறுக்கம் கொண்டவர்களின் தனித்துவத்தை அங்கீகரித்து அவர்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாகும்.
மதியிறுக்கம் என்பது ஒருவரின் வாழ்நாள் முழுவதும் இருக்கும் குறைப்பாட்டு நிலை என்பதையும், அதற்கு சிகிச்சை இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Empowering Autistic Voices" என்பதாகும்.