உலக மனநல நாள் 2018 ஆனது உலகெங்கிலும் அக்டோபர் 10 ஆம் நாள் அனுசரிக்கப்பட்டது.
மனநல ஆரோக்கியம் மற்றும் ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மன நலனின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.
இந்த ஆண்டின் மனநல நாளானது ‘மாறும் உலகில் இளைஞர்கள் மற்றும் மனநலம்’ (Young people and mental health in a changing world) என்ற கருத்துருவுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக மனநல நாள் 2018-ன் கருத்துருவானது, பருவ வயதினர்கள் மீதும் அவர்கள் கையாளும் மனநலப் பிரச்சினைகள் மீதும் கவனம் செலுத்துகிறது.