ஸ்கிசோஃப்ரினியா (மனப்பித்து) நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள் மீது உலகளாவிய கவனத்தைக் கொண்டு வருவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
பிரெஞ்சு மருத்துவர் டாக்டர் பிலிப் பினெலின் நினைவாக மே 24 ஆம் தேதியானது இத்தினத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மனநோயாளிகளுக்கு மனிதாபிமானமிக்க சிகிச்சை வழங்கியதில் இவர் ஒரு பெரும் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.
ஒரு நபரின் சிந்தித்தல், உணர்தல் மற்றும் தெளிவாக நடந்துகொள்ளும் திறனை பாதிக்கிற ஸ்கிசோஃப்ரினியா என்பது ஒரு கடுமையான மனநலக் கோளாறு ஆகும்.
2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Celebrating the Power of Community Kindness" என்பதாகும்.